தேர்தல் தேதி நெருங்கி வருவதை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், தர்மபுரி சட்டபேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் போட்டியிடும் தடங்கம் சுப்பிரமணி இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்துள்ளார்.
'தட்றோம் தூக்குறோம்...' கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் - திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி
தர்மபுரி: திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்துள்ளார்.
திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி
மேலும், அவர்களிடம் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் கிடப்பில் போடப்பட்ட தொழிற்பேட்டையை கொண்டுவருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். தொடர்ந்து, அக்ரஹாரத் தெரு, ஆஞ்சுநேயர் கோயில் தெரு, ஹரிஹரநாத சுவாமி கோயில் தெரு உள்ளிட்டப் பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க:போடுங்கம்மா ஓட்டு: இறுதிக்கட்ட பரப்புரையில் வேட்பாளர்கள் தீவிரம்