தர்மபுரி மாவட்ட தேமுதிக சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுதீஷ் கூறியதாவது, "தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் இன்று தொடங்கியது. இதனையொட்டி ஜனவரி மாதம் நடைபெறவுள்ள செயற்குழு பொதுக்குழு கூட்டம் கூட்டி தொண்டர்களின் முடிவை விஜயகாந்த் அறிவிப்பார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிச்சயம் தேர்தல் பரப்புரைக்கு வருவார்.