தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் காந்திநகர், ஆஞ்சநேயர் கோவில் தெரு, தாண்டவ உடையார் தெரு, அங்கமுத்து உடையார் தெரு, அரசு மருத்துவமனை, மாரண்டஹள்ளி பேரூராட்சி அலுவலகம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 17 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாரண்டஅள்ளியில் 20 நாள்களுக்கு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Covid-19
தருமபுரி: மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதியில் கரோனா தொற்றுக் காரணமாக மாவட்ட ஆட்சியர் மலர்விழி 20 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளார்.
District Collector issued curfew order in marandahalli
அடுத்தடுத்த சில தினங்களில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்ததால் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதியில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 நாள்கள் முழு ஊரடங்கு உத்தரவை மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார்.