தருமபுரிமாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று (ஜூன்7) முதல் அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக இருந்தது இன்று (ஜூன் 7) காலை நிலவரப்படி நீர் வரத்து 22,000 கன அடியாக அதிகரித்தது.
இதனிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாகவும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.