தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களின் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
3 அம்ச கோரிக்கையோடு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
தருமபுரி: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![3 அம்ச கோரிக்கையோடு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:36:36:1606892796-tn-dpi-01-physically-challaged-protest-vis-tn10041-02122020122300-0212f-1606891980-280.jpg)
“தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை போன்றே தமிழ்நாட்டிலும் வழங்க வேண்டும், தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து இடங்கள் வழங்க உத்தரவிட வேண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அரசுத் துறையில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் மாவட்டச் செயலாளர் கரூரான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.