தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளாகத்தில் தமிழ் பேரரசு கட்சியின் பொது செயளாலரும் இயக்குநருமான கவுதமன் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர், எட்டுவழிச்சாலைக்கு விவசாயிகள் நிலங்களை தானாக முன் வந்து நிலம் கொடுப்பதாக கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. 100 விழுக்காடு மக்கள் இதனை மறுக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி ஆடு மாடு, குரங்குகூட செத்து மடிகிறது.
தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆறுகளை, ஏரிகளை, குளங்களை தூர்வாரினால் தமிழ் நிலம் செழிப்பாக இருக்கும். இந்த மண்ணிலிருக்கும் கனிம வளங்களை, பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே, இந்த அரசுகள் துணை நிற்கின்றன. எட்டுவழிச் சாலைக்கு விவசாயிகளின் விளை நிலங்களை அதிகாரவர்க்கம் பறிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இதே போல சிவாடி கிராமத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கிடங்கு அமைக்க தலித் மக்களின் விவசாய நிலங்களின் ஒரு பிடி மண்ணை எடுக்க நினைத்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டம்போல் போராட வேண்டிவரும்.