தர்மபுரி : நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 10ஆவது வார்டு பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் விசிக சார்பில் அம்பேத்கர் என்பவர் போட்டியிட விசிக அனுமதி அளித்தது.
இதே வார்டில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆதரவாளர் குட்டி என்பவர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த வார்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் இங்கு திமுக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், விசிக தலைவர் தொல் திருமாவளவனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 10ஆவது வார்டை திமுகவுக்கு விட்டுத்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.