தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் போக்சோவில் கைது - சிறுமி பாலியல் வன்புணர்வு

தருமபுரி: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெரியசாமி
கைது செய்யப்பட்ட பெரியசாமி

By

Published : Oct 5, 2020, 7:41 PM IST

தருமபுரி நகரப்பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் பெரியசாமி (28) வாடகை வீடு எடுத்து பூ வியாபரம் செய்து வருகிறார். இந்நிலையில் பெரியசாமி தான் குடியிருக்கும் பகுதியில் கடந்த 3 மாதமாக ஆறாவது படித்துவரும் 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

நேற்று (அக்டோபர் 4) சிறுமியிடம் தவறாக நடக்க முற்பட்டபோது, சிறுமியின் பெற்றோர் வருவதைக் கண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனைப் பார்த்த சிறுமியின் பெற்றோர், இச்சம்பவம் குறித்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் காவல்துறையினர் பெரியசாமியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details