தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணையின் நீர்மட்டம் நிவர், புரெவி என அடுத்தடுத்து புயல்கள் உருவாகி மழை பெய்ததால் நிரம்பியுள்ளது.
முன்னதாக வாணியாறு அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 83 கனஅடியாக உள்ள நிலையில், தொடர் மழை காரணமாக வினாடிக்கு 308 கனஅடியாக அதிகரித்துள்ளது. வாணியாறு அணை மொத்த கொள்ளளவான 65 அடியில் 63 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வேகமாக நிரம்பிய வாணியாறு அணை! மூன்று கதவுகளில் திறக்கப்பட்ட நீர் வெளியேறி வருகிறது. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆலப்புரம், பரையப்பட்டி, புதூர் ஏரிகள் வேகமாக நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால், ஆற்றங்கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு வாணியாறு அணை திறப்பதற்கு முன்பே தொடர் மழையால் அதிகப்படியான உபரி நீர் வெளியேறி வருவதால் வாணியாறு பாசன விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...கொட்டும் மழையில் குடை பிடித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்