தருமபுரி:அரூர் நான்கு ரோடு பகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புதிய மாவட்ட நிர்வாகிகள் பேனர் வைத்துள்ளனர். பேனர் வைத்து சில மணி நேரம் கடந்த நிலையில், நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணி பேனர் கிழிப்பு.. அரூரில் நடந்தது என்ன? - ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டது
அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணியின் ஆதரவாளர்கள் வைத்த பேனர் சில மணிநேரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கிழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேனர் கிழிப்பு
பேனர் கந்தல் கந்தலாக கிழிந்து தொங்குவதை கண்ட ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பேனா் கிழிப்பு சம்பவம் குறித்து தகவலறிந்த அரூா் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி பணியாளா்கள் உதவியுடன் பேனரை அகற்றினா். மேலும் பேனரை கிழித்தது யார் என்பது தெரியாத நிலையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் ஆத்திரமடைந்தோடு யார் மீது புகார் கொடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!