தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரி மக்களின் விநோத நம்பிக்கை: மழை வேண்டி மகாபாரத சொற்பொழிவு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி! - தர்மபுரி ஸ்ரீபுதூர் முத்துமாரியம்மன் கோயில் விழா

தர்மபுரி சுற்றுவட்டார கிராம மக்கள் ஒன்றிணைந்து மழை வேண்டி மகாபாரத சொற்பொழிவு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடத்தினர்.

மழை வேண்டி மகாபாரத சொற்பொழிவு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
மழை வேண்டி மகாபாரத சொற்பொழிவு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

By

Published : Jun 8, 2022, 10:43 PM IST

தர்மபுரி:பாலக்கோடு ஸ்ரீபுதூர் முத்துமாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்றது வந்தது. 18ஆவது நாளான இன்று (ஜூன் 8) துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மகாபாரத சொற்பொழிவு நடத்தி, தெருக்கூத்து கலைஞர்களால் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றால் மழை வரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனைத் தொடர்ந்து பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த காவாபட்டி, வாழைத்தோட்டம், பனங்காடு உள்ளிட்ட 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.

மக்களின் விநோத நம்பிக்கை

இந்நிலையில் இன்று மகாபாரத 18ஆம் நாள் போர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துரியோதனனை பஞ்சபாண்டவர்கள் வதம் செய்யும் நிகழ்ச்சியை கூத்து கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினார். நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா

ABOUT THE AUTHOR

...view details