தருமபுரி:தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்திற்கு உட்பட்ட கரியம்பட்டி, செங்கனூர் உள்ளிட்ட 7 கிராமத்துக்குத் தாய் கிராமமாக நாயக்கனூர் என்ற கிராமம் உள்ளது.
இக்கிராமத்தில் ஊர் பொதுவாக 'சாமி கூலி காளை' ஒன்றைக் கடந்த 20 ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். இந்த காளை ஆண்டுதோறும் 7 ஊர் சார்பாக நடைபெறும் எருது விடும் போட்டியில் முதன்மையாகவும் சிறப்பாகவும் பங்கேற்று வந்தது.
பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும் இந்தக் காளை, எருது விடும் விழாவில் தனது வீரத்தைக் காட்டி வந்துள்ளது. இதற்குப் பொதுமக்கள் சார்பாகப் புல், தவிடு போன்ற உணவுகள் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்துள்ளது.