தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு ஆசிரியைக்கு கரோனா அறிகுறி: பெற்றோர்கள் அச்சம்!

தர்மபுரி: பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு ஆசிரியைக்கு கரோனா அறிகுறி இருப்பதால், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு ஆசிரியைக்கு கரோனா அறிகுறி பெற்றோர்கள் அச்சம்.
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு ஆசிரியைக்கு கரோனா அறிகுறி பெற்றோர்கள் அச்சம்.

By

Published : Jan 26, 2021, 4:48 PM IST

தமிழ்நாடு அரசு 10, 12ஆம் வகுப்பு மாணவா்களுக்காக பள்ளிகள் திறக்கலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் திறக்கப்பட்ட பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட ஆசிரியை கடந்த சில தினங்களுக்கு முன் கோவைக்கு சென்று வந்துள்ளார்.

தொடர்ந்து பள்ளிக்கு வந்தபோது அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்துள்ளது. இருப்பினும் அவர் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியையிடம் பாடம் படித்த மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க...அரசு மருத்துவர்களின் அலட்சியம்... கால் முழுவதும் பரவிய புற்றுநோய் - மகனை காப்பாற்ற பரிதவிக்கும் ஏழை தந்தை!

ABOUT THE AUTHOR

...view details