தர்மபுரி:ஆன்லைன் விளையாட்டில் பணத்தை கட்டி இழந்த 20 வயது இளைஞர் மனவிரக்தியில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். நல்லம்பள்ளியை அடுத்துள்ள குரும்பட்டி மாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி.
இவரது மகன் வெங்கடேஷ் (20). இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் மூன்று வருடங்களாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்காக அவருடைய தந்தை வெங்கடேஷுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். முதலில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பாடங்கள் சம்பந்தமான குறிப்புகள் உள்ளிட்டவற்றை எடுத்து படிப்பதில் தீவிரம் காட்டி வந்த வெங்கடேஷ் நாளடைவில் கேம்கள் விளையாடுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
இந்த ஆர்வம் பணம் கட்டி கேம்கள் விளையாடும் நிலைக்கு சென்றது. தொடர்ந்து விளையாடியதில் தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் அவர் இழந்தார். மேலும், தொடர்ந்து விளையாடுவதற்கு பணம் இல்லாததால் வீட்டிலிருந்த நகையை எடுத்து தனியார் நகை அடகு கடையில் அடகு வைத்து அந்த பணத்தில் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளார்.