தருமபுரி மாவட்டத்தில், தண்டுகாரம்பட்டி, அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 1,500 குடும்பங்கள் மண்பாண்டம் செய்யும் தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். தற்போது, மண்பானையில் பொங்கல் வைப்பது குறைந்து வருகிறது.
அதனால், மண்பாண்டம் செய்பவர்கள் பலரும் அந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யத்தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மண்பாண்டத் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் விதமாக தருமபுரி தண்டுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 10க்கும் மேற்பட்டோர் புதிய முயற்சியாக மண்பாண்டத் தொழிலாளர்களிடம் மண்பாண்டங்களை விலைக்கு வாங்கி அந்த மண்பாண்டங்களில் கண்ணைக் கவரும் பல வண்ணங்களைப் பூசி விற்பனைக்கு வைத்துள்ளனர்.