தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்சோ சட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி: ஏராளமான காவல் துறையினர் பங்கேற்பு! - Police meeting

தருமபுரி: மாவட்ட காவல் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

போக்சோ சட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி: ஏராளமான காவல் துறையினர் பங்கேற்பு!
Training class

By

Published : Oct 27, 2020, 8:16 PM IST

Updated : Oct 27, 2020, 8:25 PM IST

தருமபுரி மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் காவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு தருமபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பில் காவலர்கள் குழந்தைகளுக்கு நண்பனாகவும், வழிகாட்டியாகவும், பாதுகாவலனாகவும் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும், போக்சோ சட்டம், குழந்தை திருமண சட்டம் ஆகிய வழக்குகளில் புலன் விசாரணை எவ்வாறு மேற்கொள்வது. நீதிமன்ற விசாரணையின் போது குழந்தைகள், அவர்களின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் இப்பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார். கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம், குற்றவியல் நடுவர் நீதிபதி செல்வராஜ், அரசு வழக்குரைஞர் உமா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

Last Updated : Oct 27, 2020, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details