தருமபுரியில் கடும் வெயில்: போக்குவரத்து காவலர்களுக்கு நீர், மோர் வழங்கிய டிஎஸ்பி! - தருமபுரி
தருமபுரி: கடும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில் போக்குவரத்து காவலர்களுக்கு நீர், மோர் வழங்குவதை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் இன்று தொடங்கிவைத்தார்.
![தருமபுரியில் கடும் வெயில்: போக்குவரத்து காவலர்களுக்கு நீர், மோர் வழங்கிய டிஎஸ்பி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2637337-619-ae837bc7-384f-417c-8048-cf97f0ce44f7.jpg)
தருமபுரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயில் நிலவிவருவதால், வெப்பநிலை 104 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகிவருகிறது. இந்த வெயிலால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
இந்நிலையில், கொளுத்தும் வெயிலில் பணியாற்றிவரும் போக்குவரத்து காவல் துறையினருக்கு நீர், மோர் வழங்க மாவட்ட காவல் துறையும், ரோட்டரி சங்கமும் இணைந்து முடிவுசெய்தது. இதன் தொடக்க நிகழ்வை தருமபுரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், தருமபுரி நான்கு சாலை பகுதியில் இன்று தொடங்கிவைத்தார்.
தருமபுரி மாவட்ட காவல் துறையும், ரோட்டரி சங்கமும் இணைந்து காவலர்களுக்கு நீர், எலுமிச்சை சாறு வழங்க உள்ளது. காவலர்களுக்கு இன்று தொடங்கி, வெயில் காலம் முடியும் வரை தினமும் மோர், பழச்சாறு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.