தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரூர் அருகே இளைஞர்கள் உடன் வாக்குவாதம்.. அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! - அண்ணாமலையை தடுத்த

Case against Annamalai: அரூர் அருகே உள்ள லூர்து மாதா கோயிலில் மாலை அணிவிக்கச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தடுத்து, இளைஞர்கள் கோஷமிட்ட விவகாரத்தில், அண்ணாமலை மீது பொம்மிடி காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளில் வழக்கு
அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 11:37 AM IST

தருமபுரி: தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்கிற நடைபயணத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி தருமபுரியில் தனது நடைபயணத்தை பாப்பிரெட்டிப்பட்டியில் துவங்கினார். பின்னர், பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி அரூர் செல்லும்போது, பி.பள்ளிப்பட்டியில் உள்ள லூர்து அன்னை தேவாலயத்தில், அன்னை மாதாவின் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார்.

அப்போது அங்கு கூடியிருந்த சில இளைஞர்கள், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் மற்றும் படுகொலைகளை முன்னிறுத்தி, பாஜக அரசு கிறிஸ்துவ மக்களின் இறப்பைக் குறித்து எந்த கேள்வியும் கேட்கவில்லை, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாலை அணிவிக்கக் கூடாது என கோஷங்களை எழுப்பி தடுத்து நிறுத்தினர்.

அப்போது, அங்கிருந்த இளைஞர்களிடம் மணிப்பூரில் நடைபெற்ற விவகாரம் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்தார். இருப்பினும், அவரை மாலை அணிவிக்க அங்கிருந்த இளைஞர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அண்ணாமலை உள்பட, அவருடன் வந்திருந்த பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க:அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை; ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

பின்னர், காவல் துறையினர் அண்ணாமலையை தடுத்து நிறுத்திய இளைஞர்களை அப்புறப்படுத்திய பிறகு, அவர் அன்னை மாதாவின் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். இருப்பினும், இளைஞர்கள் மத்தியில் நடந்த வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "நான் 10 ஆயிரம் நபர்களுடன் வந்து தர்ணா செய்தால் என்ன ஆகும்?" என கூறினார்.

இந்த சம்பவம் நடந்த வீடியோக்கள் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, மக்கள் மத்தியில் வேகமாக பரவியது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பட்ட மக்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையில் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் பதிவுகள் பதிவிட்டனர்.

இந்நிலையில், கார்த்திக் என்பவர் பொம்மிடி காவல் நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில், அண்ணாமலை மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது, பொது அமைதியை குலைக்கத் தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது என 153(A)(a), 504, 505(2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு.. கரூரில் தொடரும் சோதனைகள் - முழு பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details