தருமபுரி: நல்லம்பள்ளி அருகே உள்ள பங்குநத்தம் கொட்டாய் பகுதியில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்குச் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்து, அதற்காக அடிக்கல் நாட்டுவதற்காக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் அப்பள்ளிக்கு சென்றிருந்தார்.
பள்ளிக்கு சென்று சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் நாட்டிய பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளிக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மதிய நேரம் என்பதால் பள்ளி மாணவர்கள் அனைவரும் உணவு அருந்தச் சென்றனர்.