தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அவர் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட எர்ரபையன அள்ளி, பண்ட அள்ளி, சோமன அள்ளி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை, ஆண்டிற்கு ஆறு சிலிண்டர் உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளைக் கூறி பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.