தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்! - dharmapuri latest news

தருமபுரி: பென்னாகரம் அருகே முதுக்கம்பட்டி கிராம மக்கள் குடிநீர் கேட்டு கால்நடைகள் மற்றும் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

dharmapur water problem

By

Published : Oct 11, 2019, 5:34 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுக்கம் பட்டி பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து முதுக்கம்பட்டி ஏரிக்கல்னூர் சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதுக்கம்பட்டி கிராம மக்கள் குடிநீர் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கும் ஊராட்சி அமைப்புகளுக்கும் பல முறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று காலை பெண்கள் காலி குடங்கள் மற்றும் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலி குடங்களுடன் பொதுகமக்கள் சாலை மறியல்

இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அந்த உறுதியின் அடிப்படையில் அரை மணி நேரமாக நீடித்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:சீன அதிபரின் வருகைக்காக திபெத் மாணவர்கள் கைது - திபெத்தியர்களின் கூட்டமைப்பு கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details