தருமபுரி மாவட்டம் அரூர் நகர் பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை மாவேரிப்பட்டி பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டு மக்கும், மக்கா குப்பைகள் என இருவகைகளாக பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் குப்பைக் கிடங்கால், உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதாக மாவேரிப்பட்டி, உடையானூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து, மாவேரிப்பட்டி புதூர் கிராம மக்களின் நலன்கருதி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்து வரும் நிலையில், குப்பைக் கிடங்கை விரிவாக்கம் செய்யும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவந்துள்ளது.