தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாக்கடையை தூர்வார அலட்சியம் காட்டிய நகராட்சி: ஒன்றாக இணைந்து தூர்வாரிய மக்கள்

தர்மபுரி: அன்னசாகரம் பகுதியில் ஒரு மாதமாக கழிவுநீர் கால்வாயை நகராட்சி நிர்வாகம் தூர்வாராமல் இருந்ததால் பொதுமக்களே ஒன்றிணைந்து தூர்வாரிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாக்கடையை தூர்வார அலட்சியம் காட்டிய நகராட்சி
சாக்கடையை தூர்வார அலட்சியம் காட்டிய நகராட்சி

By

Published : Jun 7, 2021, 10:49 PM IST

தர்மபுரி நகராட்சிக்குள்பட்ட அன்னசாகரம் 32ஆவது வார்டு தீத்தி அப்பாவு தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த ஒரு மாதமாக தூர் வாரப்படாததால் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நின்றுள்ளது.

இதனையடுத்து இரவில் கொசுத் தொல்லையாலும் சாக்கடையில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும் பொதுமக்கள் சிரமப்பட்டுவந்தனர்.

நகராட்சி கழிவுநீர் கால்வாயை துர்வார வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும் நகராட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்காததால் 10க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து சாக்கடையை தூர்வாரி அடைப்புகளை சீர் செய்தனர்.

கழிவுநீர் கால்வாயிலிருந்து அகற்றப்பட்ட கழிவு பொருள்களையாவது நகராட்சி பணியாளர்கள் அகற்ற வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:’கோயில் நிலங்கள் குறித்த விசாரணைக்கு தனி தீர்ப்பாயம்’ - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details