தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காற்றில் பறக்கும் உத்தரவு - சந்தையில் மாஸ்க் அணியாத வியாபாரிகள்

தருமபுரி: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் காய்கறிச் சந்தையில் முகக்கவசம் அணியாமல் வியாபாரிகள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

mask
mask

By

Published : Apr 23, 2020, 12:50 PM IST

தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் மாவட்ட நிர்வாகம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. சாலைகளில் செல்பவர்கள், அத்தியாவசிய பொருள்களை வாங்க வெளியில் வருபவர்கள் முகக்கவசம் இல்லாமல் வரக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனிடையே தருமபுரி பாப்பாரப்பட்டி பேரூராட்சி காய்கறி விற்பனைச் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்பவர்கள் முகக்கவசம் அணியாமல் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.

முகக்கவசம் அணியாமல் காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள்

முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று பாப்பாரப்பட்டி பேரூராட்சி ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காய்கறிச் சந்தையில் உள்ள வியாபாரிகள் இந்த உத்தரவை கண்டுகொள்வதில்லை.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ஏற்காமல் முகக்கவசம் அணியாமல் காய்கறிச் சந்தையில் விற்பனை செய்பவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ட்ரோன் மூலம் கண்காணித்த காவல் துறை - சிதறியோடிய இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details