தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான மறைமுக தேர்தல், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்றத்தில் நடைபெற்றது.
இத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த யசோதா மதிவாணன், நடைபெற்ற மறைமுக தேர்தலில் 11 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் சத்தியசேட்டு ஏழு வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
குடும்பத்தினர் யசோதவை வாழ்த்தியபோது இதையடுத்து வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரான யசோதாவிற்கு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி நேரில் வந்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தருமபுரி அதிமுக ஊராட்சித் தலைவர் ஆனந்தக் கண்ணீர்! மேலும் யசோதாவின் குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். குடும்பத்தினரின் வாழ்த்தை கேட்ட யசோதவிற்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது.
இதையும் படியுங்க: அதிமுகவினர் மீது திமுகவினர் புகார்