தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கூசிக்கொட்டாய் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடை திறக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அதே பகுதியில் கடை திறக்கும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாலக்கோட்டில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மக்கள் புகார்! - கிராம மக்கள்
தர்மபுரி: பாலக்கோட்டில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை கொடுத்தனர்.
டாஸ்மாக்
இந்த மதுபானக் கடை குடியிருப்பு பகுதி அருகே திறக்கப்படும் பட்சத்தில், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என அலுவலர்களிடம் மக்கள் மனு அளித்துள்ளனர். இருந்தும் கடை திறக்கும் முயற்சியை அலுவலர்கள் கைவிடாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்கபட்டால் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.