தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவர்! - தர்மபுரி மாவட்டச்செய்திகள்

தர்மபுரி: நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கொலை செய்ததுடன், தானும் மின்விசிறியில் தூக்கிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டார்.

கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை
கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை

By

Published : Mar 8, 2021, 6:11 PM IST

தர்மபுரி பிடமனேரி கோவிந்த தாஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (42). மருந்து நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றியதோடு மளிகைக் கடையும் நடத்திவந்தார். இவருக்கும், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகள் திவ்யா (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு வைஷ்ணவி, ரக்ஷிதா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களை வெங்கடசமுத்திரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ராஜ்குமாருக்கும், திவ்யாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடைய நேற்றிரவு (மார்ச் 7) கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் திவ்யாவை இன்று அதிகாலை வீட்டில் கல்லால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துவிட்டு, தானும் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தீவிர விசாரணை

திவ்யாவை கொலை செய்த ராஜ்குமார் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடிதத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதன் பேரில், கொலைசெய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தர்மபுரி காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, நகர காவல் ஆய்வாளர் சரவணன், தடயவியல் வல்லுநர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவம் குறித்து நகர காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து சடலங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலைசெய்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details