தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அமைச்சருக்கு தருமபுரி எம்.பி., கடிதம்!

தருமபுரி: மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு பணிகளை நிரப்ப வேண்டும் என தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Dharmapuri MP writes letter to Union Minister
Dharmapuri MP writes letter to Union Minister

By

Published : Aug 23, 2020, 12:14 AM IST

தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் தேசிய தொழில்நுட்ப கழகம் மற்றும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி 304 பேராசிரியர் பணியிடமும், 697 இணை பேராசிரியர் பணிகள், 905 உதவி பேராசிரியர் பணியிடமும் காலியாக உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின் படி இந்தியாவின் முதன்மை பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நிரப்பாமல் இருப்பது, உயர் கல்வித் தரத்தை பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.

திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதம்

மத்திய பல்கலைக்கழகங்களில் தரத்தை உயர்த்த உடனடியாக பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வழிவகை செய்ய வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் படி பணியாளர்களை நியமிக்க வேண்டுமெனவும்’ கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:’கரோனாவுக்குப் பிந்தைய காலம் சுலபமாக இல்லை’ - ஆடை வடிவமைப்பாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகள்!

ABOUT THE AUTHOR

...view details