நாடாளுமன்றத்தின் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினா் செந்தில்குமார், புகழ்பெற்ற ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை பன்னாட்டு சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும்.
பன்னாட்டு சுற்றுலா தளமாக அறிவித்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைவு மற்றும் முறையான கட்டமைப்பு இல்லாத காராணத்தால் ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது.