தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொன்னது ஒன்னு செஞ்சது ஒன்னு... கழிவறை கட்டடத்தை திறக்க மறுத்த எம்பி

தர்மபுரியில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி நவீன முறையில் கட்டாத கழிவறையை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறக்க மறுத்தார்.

கழிவறை கட்டடத்தை திறக்க மறுத்த எம்பி
கழிவறை கட்டடத்தை திறக்க மறுத்த எம்பி

By

Published : Sep 20, 2021, 6:53 PM IST

தர்மபுரி: அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை கட்ட தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நிதி ஒதுக்கியிருந்தார்.

இந்த நிதியில் கழிவறை கட்டி முடிக்கப்பட்டதாக ஒப்பந்ததாரர் தெரிவிக்கவே இன்று (செப்.20) அக்கட்டடத்தை திறக்க செந்தில்குமார் சென்றுள்ளார். அங்கு, திறப்பு விழாவிற்காக இரவோடு இரவாக வண்ணப் பூச்சுக்கள் அடிக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.

பின்பு, நவீன வசதிகளுடனான பொருள்களைக் கொண்டு கட்டாமல் சாதாரண பொது கழிவறைக்கு பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்ததையும் கண்டார்.

கழிவறை கட்டடத்தை திறக்க மறுத்த எம்பி

நவீன வசதிகளுடன் கூடிய கழிவறையை கட்டுவதற்கு நிதி பெற்றுக்கொண்டு, இவ்வாறு மின்சார வசதிகூட இல்லாமல் சாதாரண கழிவறையை கட்டியதை கண்டித்தார்.

கழிவறை கட்டடத்தை திறக்க மறுத்த எம்பி

மேலும், நவீன வசதிகளுடன் கழிவறை கட்டிய பின்னரே இதனை திறக்க முடியும் எனக் கூறிவிட்டு அதனை திறக்க மறுத்துவிட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: இரண்டு மாடிக்கு மேல் கட்டடம் - லிஃப்ட் கட்டாயம்

ABOUT THE AUTHOR

...view details