தருமபுரி:வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி தலைமையில் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
முதற்கட்டமாக சென்னையில் நடைபெற்ற வன்னியர் தனி இடஒதுக்கீடு போராட்டம், இரண்டாம் கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டமாகவும் நடைபெற்றது.
தற்போது, மூன்றாம் கட்டமாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டமாக நடைபெற்றவருகிறது.
இந்நிலையில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி தலைமையில் 1,000க்கும் மேற்பட்ட பாமகவினர் தருமபுரி கடத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று செயல் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.