தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவாவை சந்தித்து மொரப்பூர் தர்மபுரி ரயில் திட்டம் மற்றும் அதியமான் கோட்டை மேம்பாலம் கட்டுமான பணிகள் குறித்து மனு அளித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம் குறித்து முன்னாள் ரயில்வே அமைச்சர் ரயில்வே வாரிய தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தேன். 358 கோடி ரூபாய் மதிப்பில் தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தை செயல்படுத்த பியூஸ் கோயல் 4. 03 .2019 அன்று தர்மபுரியில் அடிக்கல் நாட்டினார் .
அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், 36 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மொரப்பூர் பகுதியிலிருந்து தர்மபுரி புதிய ரயில்வே திட்டத்திற்கான நில அளவை பணிகள் நடைபெற்று வருகின்றன.