தர்மபுரிதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் இன்று (செப்.23) முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது, கடந்த ஓராண்டில் செய்த பணிகளின் விவரத்தினை முதலமைச்சரிடம் ஆவணமாக வழங்கினார்.
அவர் வழங்கிய அறிக்கையில் சமூக வலைதளம் மூலம் உதவி கேட்ட மக்களுக்கு செய்த உதவி, பொதுமக்களுக்கு செய்த பணிகள் உள்ளிட்டவை அறிக்கையாக தயார் செய்து வழங்கினார்.
கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மாத அறிக்கையை வழங்க இயலாத நிலையில், கடந்த ஓராண்டு காலத்தில் செய்த பணிகள் குறித்த ஆண்டு அறிக்கையை முதலமைச்சரிடம் அவர் வழங்கினார்.
தமிழ்நாடு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களது பணிகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாதம் மாதம் தாங்கள் செய்த பணிகள் குறித்த விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க:பள்ளிகள் திறப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்