தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைநயத்துடனும் இயற்கையுடன் இயைந்த அமைப்புடனும் கட்டப்படும் வீடு: அசத்தும் ஆடிட்டர்! - dharmapuri morden house built without cement

தருமபுரி: மணிகண்டன் தனது கனவு இல்லத்தை ஐந்து விழுக்காடு சிமெண்ட் மட்டும் பயன்படுத்திவிட்டு 95 விழுக்காடு சிமெண்ட் இல்லாமல் மண், மர வேலைப்பாடுகளுடன் ஒன்றரை ஆண்டுகளாக ஒருவர் பிரமாண்ட வீடு கட்டிவருகிறார். அவர் குறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.

morden_house_built_without_cement_
morden_house_built_without_cement_

By

Published : Oct 26, 2020, 5:39 PM IST

Updated : Oct 29, 2020, 2:29 PM IST

மனிதன் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை உணவு, உடை, உறைவிடம். இந்த உறைவிடம் என்பது தற்போதைய காலத்தில் பல்வேறு முறைகளில் கட்டப்பட்டுவருகிறது. பொதுவாக வீடு என்றால் கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடு, அடுக்கு மாடி வீடு இதுபோன்றுதான் அனைவரும் தங்களின் வசதிக்கேற்றவாறு கட்டி வாழ்ந்துவருகிறார்கள். இந்த வீடு கட்டுவதற்கு மூலப்பொருள் சிமெண்ட், கம்பிகள்தான்.

இன்றைய தலைமுறையினர் பலர் சிமெண்ட், கம்பி இல்லாமல் வீடு கட்டுவதில் பல புதுமைகளைப் புகுத்திவருகின்றனர். உதாரணமாக சேறு, சுண்ணாம்பைக் கொண்டு வீடு கட்டுதல், சேறு, சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் கொண்டு வீடு கட்டுதல், நெகிழி, கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு வீடு கட்டுதல் எனப் பல்வேறு முறையில் வீடு கட்டிவருகின்றனர்.

அந்த வகையில், தருமபுரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் புதுமையான முறையில் வீடு கட்டிவருகிறார்.

ஆடிட்டர் தொழில் செய்துவரும் மணிகண்டன் தனது கனவு இல்லத்தை ஐந்து விழுக்காடு சிமெண்ட் மட்டும் பயன்படுத்திவிட்டு மண், மர வேலைப்பாடுகளுடன் ஒன்றரை ஆண்டுகளாக பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிவருகிறார். சுமார் நான்காயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு தரை கட்டுமானம் மட்டும் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுவர்கள் கட்ட கேரள மாநிலத்திலிருந்து வரவைக்கப்பட்ட ஓடுகள் மூலம் இந்த வீடு கட்டியுள்ளார்.

அசத்தும் ஆடிட்டர்

வீட்டின் சுற்றுப்புறம் முழுவதும் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. அகழியில் தண்ணீர் தேக்கி அதில் மீன்கள் வளர்த்துவருகிறார். வீட்டில் 40 விழுக்காடு பொருள்கள் மூங்கில் கொண்டு அழகு செய்யப்பட்டுள்ளது. மரங்கள் மூலம் செய்யப்பட்ட படிக்கட்டுகள், மூங்கில்களால் செய்யப்பட்ட விளக்குகள், வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரிக்க தனியாகத் தொட்டி ஒன்றை அமைத்துள்ளார்.

இந்தத் தொட்டியில் தண்ணீர் தேக்கி அதிலிருந்து படிப்படியாக தண்ணீர் சுத்திகரிப்பு செய்து பூமிக்குள் அனுப்புகின்றார். மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்கும் வகையில் வீடு முழுவதும் முழுமையாக வடிகால் அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. மழைநீரை சேகரிக்க சிறிய அளவிலான கிணறு வெட்டப்பட்டு கிணற்றில் மழைநீர் சேமிக்கப்படுவதால் கிணற்றிலிருந்து அருகில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து சுத்தமான தண்ணீர் கிடைப்பதாக மணிகண்டன் தெரிவித்தார் .

மேலும் 20 ஆயிரம் லிட்டர் மழைநீரை சேமிக்க தண்ணீர் தொட்டி அமைத்துள்ளார். இந்த வீட்டிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாகக் கூடாது என்பதால் கிணறு அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டில் உள்ள கதவு, வாசல்கள் காரைக்குடி வீடுகள் போல கலைநயத்துடன் வடிவமைத்துக் கட்டியுள்ளார்.

வீட்டில் சமையலறையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மரங்களால் செய்யப்பட்ட மேசையில் உணவு தானியங்கள் கெட்டுப்போகாத அளவில் அமைக்கப்பட்டு அதன் மீது கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் குறித்து குழந்தைகள் தெரிந்துகொள்ளும் வகையில் நவதானியங்கள், சிறுதானியங்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.

தமிழர் மரபு சார்ந்த வீடுகள் கட்ட வேண்டும் என்ற ஆசை காரணமாகவும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழவும், காற்றோட்டமான வீடு கட்ட வேண்டும் என தனது எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாகவும் இந்த வீட்டில் ஏசி இல்லாமல் வீடு கட்டுமானம் செய்யப்பட்டுள்ளதால் குளிர்காலங்களில் வீட்டில் வெதுவெதுப்பான வெப்பமாகவும் வெயில் காலங்களில் குளிர்ச்சியாகவும் இருக்கும் வகையில் வீடு கட்டப்பட்டுள்ளதாக மணிகண்டன் தெரிவித்தார்.

கலைநயத்துடனும் இயற்கையுடன் இயைந்த அமைப்புடனும் கட்டப்படும் வீடு

இதையும் படிங்க: ஆன்லைன் மூலம் அவகோடா பழம் விற்பனை: அசத்தும் மென்பொருள் பொறியாளர்!

Last Updated : Oct 29, 2020, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details