தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேண்டுகோள் விடுத்த தர்மபுரி எம்எல்ஏ! - தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன்

விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் பயறுவகைகள், தொழில்நுட்பம் குறித்து வேளாண்மைதுறை அலுவலர்கள் எடுத்துகூற வேண்டும் என தர்மபுரி எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தர்மபுரி எம்எல்ஏ
தர்மபுரி எம்எல்ஏ

By

Published : Jun 18, 2021, 11:12 PM IST

தர்மபுரி: நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக ஆலோசனை கூட்டம் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டக்கலைத் துறை, வேளாண்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன், “நல்லம்பள்ளி பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள், அதிக லாபம் தரக்கூடிய விவசாய முறை மற்றும் சாகுபடி அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை எடுத்துக்கூறி தரமான விதைகளை வழங்க வேண்டும்” என்றார்.

மேலும், மூன்று ஆண்டுகளில் பலன் தரக்கூடிய தென்னை, கொய்யா, மாம்பழம், சப்போட்டா சாகுபடி குறித்து எடுத்துக் கூற கேட்டுக்கொண்டார். நல்லம்பள்ளி விதை கிடங்கை பார்வையிட்ட அவர் கையிருப்பில் நெல், காராமணி, நிலக்கடலை இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து அலுவலர்களிடம் நேரடியாக பார்வையிட்டு கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: ட்விட்டர் ஊழியர்களிடம் நாடாளுமன்றக் குழு கிடுக்கிப்பிடி விசாரணை

ABOUT THE AUTHOR

...view details