உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்றால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரழந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க உரிய மருத்துவ உபகரணங்கள், படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகளை அமைப்பது பெரும் சவாலாக உள்ளது.
கரோனா தடுப்பு பணிக்காக ரூ. 25 லட்சம் ஒதுக்கிக்கிய எம்.எல்.ஏ
தருமபுரி: சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி கரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த பேரபாய சூழ்நிலையில் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பல்வேறு தரப்பினர் பொருளுதவி அளிக்கும்படி பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனையொட்டி, டாடா குழுமம், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பெருமளவில் நிதியுதவி அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்களை நிறுவ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் வழங்கினார்.