தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் ஒரேநாளில் 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - தருமபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி: இன்று (செப்.18) 106 பேருக்கு கரோனா வைரஸ் ‌உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 554 ஆக அதிகரித்துள்ளது.

dharmapuri Latest Corona Update
dharmapuri Latest Corona Update

By

Published : Sep 18, 2020, 9:30 PM IST

தருமபுரி மாவட்டத்தில் 10 வயது முதல் 12 வயதிற்குள்பட்ட ஐந்து குழந்தைகள், மருத்துவர், சுகாதார ஆய்வாளர், காவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகப் பணியாளர் உள்ளிட்ட 106 பேருக்கு இன்று (செப்.18) கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 554 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ளடக்கிய பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

மாவட்டத்தில் நாளொன்றுக்கு 100 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு முகாம்களில் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு முகாமிலேயே கரோனா தொற்று பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details