தருமபுரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும்பான்மையானோர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தருமபுரி வந்தவர்கள். தருமபுரி சந்தஅள்ளிப் பகுதியைச் சார்ந்த 61 வயது நபர் ஒருவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
தருமபுரியில் கரோனாவால் ஒருவர் உயிரிழப்பு - தர்மபுரி மாவட்ட செய்திகள்
தருமபுரி : இன்று (ஆக.16) 20 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
![தருமபுரியில் கரோனாவால் ஒருவர் உயிரிழப்பு dharmapuri Latest Corona Update](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:04:25:1597592065-tn-dpi-01-corona-update-img-7204444-16082020210312-1608f-02236-171.jpg)
dharmapuri Latest Corona Update
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,009 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 804 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 194 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.