தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்' - அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் - Dharmapuri income Agreement

தருமபுரி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் முன்பு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

By

Published : Mar 10, 2020, 6:22 PM IST

Updated : Mar 10, 2020, 11:46 PM IST

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.

அதேபோல் தருமபுரி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகம் முன்பு, அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு அலுவலகம் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நுழைவுவாயில் முன்பு திரண்டிருந்த தொழிலாளர்கள் மாநில அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து திடீரென அவர்கள் சேலம் பிரதான சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த காவல் துறையினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

இதையும் படிங்க: வழக்கறிஞர் வெட்டிக் கொலை: உறவினர்கள் சாலை மறியல்...

Last Updated : Mar 10, 2020, 11:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details