தர்மபுரி : காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாற்றம்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், மழை நீரின் வருகையாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடி நீர் அதிகரித்து 20 ஆயிரம் கன அடியாக உள்ளது. நேற்று மாலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இன்று (செப்.04) நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு