தருமபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். வழக்கமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளித்தும் இங்கு உள்ள மீன் உணவை சுவைத்தும் சுற்றுலாவை மக்கள் கொண்டாடுவர்.
சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கட்டண கழிப்பிடம், கூத்தப்பாடி ஊராட்சியின் கீழ் அமைக்கப்பட்டு உள்ளது. கட்டணக்கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க பத்து ரூபாய் வசூல் செய்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் அனைவரிடமும் பத்து ரூபாய் வசூல் செய்வதாகவும் கழிவறையின் கதவு கூட முறையாக இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.