தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகள், சந்தேகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
விவசாயிகள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர். மாவட்ட ஆட்சியா் விவசாயிகளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அலுவலர்கள் தங்கள் தொலைபேசியில் வாட்ஸ்அப் செய்துகொண்டும் சிலர் தூங்கிக் கொண்டும் இருந்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அயர்ந்து தூங்கும் அரசு அலுவலர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கலந்துகொண்டு பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் விதைநெல் தட்டுப்பாடு உள்ளது. விதைநெல் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகைசெய்ய வேண்டும் என்றார்.
செல்போனில் பிசியாக இருக்கும் அலுவலர் அழிந்து போன தென்னை மரங்களுக்கு அரசின் சார்பில் நிவாரணத் தொகை பெற்றுத்தர வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மாவட்டத்தில் வறட்சி காரணமாக காய்ந்துபோன தென்னை மரங்கள் குறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான பதில் கிடைத்தவுடன் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் செல்போனில் பிசி மறுபக்கம் ஆழ்ந்த தூக்கம்! இதையும் படியுங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 2 லட்சம் கையெழுத்துகள் பெறத் திட்டம் - க.பொன்முடி