தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பால் 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பில் பேசினோம்.
அப்போது அந்நபர், "நான்கு நாள்களாக நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். மருத்துவமனைக்கு வந்த நாள் முதல் மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
காலை இட்லி, மெதுவடை, மாத்திரைகள்.
நண்பகல் கபசுரக் குடிநீர்.
மதியம் முட்டையுடன் பிரியாணி, கீரைக் குழம்பு சாதம், சாம்பார் சாதம்.
மாலை சுண்டல், சுக்கு காப்பி, பிஸ்கட்.
இரவு சப்பாத்தி, பொங்கல், இட்லி உள்ளிட்டவை வழங்குகின்றனர்.
தினமும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ரத்த மாதிரிகள், ஈசிஜி எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கப்படுகின்றன. எந்த நேரம் பாதிக்கப்பட்ட நபர்கள் வந்தாலும் மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் அன்பாக நடந்து கொள்கின்றனர். தனியார் மருத்துவமனையில்கூட இதுபோன்ற சிகிச்சை கிடைக்காது. தருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: மத்திய சுகாதாரக் குழுவினர் முதலமைச்சருடன் ஆலோசனை