தருமபுரி: தருமபுரி திறந்த வெளி நெல் குடோனில் சுமார் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல் வெளியான நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட நெல் அரவை முகவர்கள் உள்ளனர். இவர்கள், நீண்ட நாட்களாக நெல் குடோன் அமைத்துத்தர வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதன் காரணமாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் பங்களாவின் பின்புறத்தில் உள்ள திறந்தவெளியில் சமீபத்தில் நெல் குடோன் அமைக்கப்பட்டது. இந்த நெல் குடோனுக்கு, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில்கள மூலம் நெல் கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: கங்கை முன் திரண்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள்! போலீசாருடன் வாக்குவாதம்.. உச்சக்கட்ட பரபரப்பு!
7,000 டன் நெல் மூட்டைகள் மாயம்:இந்நிலையில், அந்த குடோனில் பாதுகாக்கப்பட்ட மொத்த நெல் மூட்டைகளில், பல டன் நெல் மூட்டைகள் மாயமானதாக நுகர்பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் தருமபுரி உள்ள அந்த திறந்தவெளி நெல் குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுமார் 7,000 டன் நெல் மூட்டைகள் குறைவாக உள்ளதை கண்டுபிடித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Chennai to Tirupati: கிடப்பிலுள்ள சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை.. இந்த ஆண்டிற்குள் நிறைவடையுமா?
இதுகுறித்து தருமபுரி நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்திடம் கேட்டபோது, 'திறந்தவெளி குடோனுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வந்துள்ளன. இந்நிலையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை முறையாக அடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், நெல் மூட்டைகள் குறைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தனர்.