கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி வரை நீர் வெளியேற்றப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு கடந்த மூன்று தினங்களாகத் தொடர்ந்து வந்த நிலையில் நீர் வரத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அதிகரித்து வந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைவு! - காவிரி நீர்
தருமபுரி: கர்நாடகா அணைகளில் இருந்து வரும் நீர்வரத்து இன்று(செப்.24) ஒகேனக்கல்லில் 25 ஆயிரம் கனஅடி நீர் குறைந்து 40 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
hogenakkal
நேற்று(செப்.23) நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைந்திருந்தது. இன்று மேலும் 25 ஆயிரம் கனஅடி நீர் குறைந்து 40 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உள்ளது. கபினி அணையிலிருந்து விநாடிக்கு 17 ஆயிரத்து 497 கனஅடி வீதமும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 29 ஆயிரத்து 970 கனஅடி நீரும் என 47 ஆயிரம் கனஅடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் நீா்வரத்து நாளை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.