தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் டிஎன்பிஎஸ்சி தோ்வுக்காக படித்து வந்துள்ளார். இவர் எருமியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் சரவணன் முருகன், அவரது நண்பர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு டிஎன்பிஎஸ்சியில் தனக்கு ஆட்கள் உள்ளதாகவும், அதன் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.
அதை நம்பி சரவணன் முருகன் உட்பட அவரின் நண்பர்கள் 7 பேர் முருகனிடம் 55 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் சரவணன் முருகன், அவரின் நண்பர்கள் கலந்து கொண்டு வேலைக்கு காத்திருந்த நிலையில், போலியாக பணி ஆணைகளை தயார் செய்து முருகன் அவர்களிடம் வழங்கியுள்ளார்.