தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பென்னாகரம் அம்பேத்கர் சிலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதை கண்டறிந்து கைப்பற்றினர்.
தர்மபுரியில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்! - பணம் பறிமுதல் செய்திகள்
தர்மபுரி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை பென்னாகரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் தனியார் பீரோ கட்டில் விற்பனை கடையில் பணியாற்றி வருவதாகவும், அவர் வசூல் செய்த பணத்தை தர்மபுரியில் உள்ள அலுவலகத்திற்கு கட்ட சென்றபோது உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதாலும் பறக்கும் படையினர் கைப்பற்றி உள்ளனர். கைப்பற்றிய பணம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க...ELECTION BREAKING: வேட்பாளர் மாற்றம் முதல் அறிக்கை குற்றச்சாட்டு வரை!