தருமபுரி:நிவர் புயலின் காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், நாளை (நவ. 29) கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தருமபுரி நகர பேருந்து நிலைய மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது.
நிவர் புயல் காரணமாக கடந்த மூன்று தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்தது.
இதன் காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. நாளை (நவ. 29) கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், ஏராளமானோர் பூக்கள் வாங்க வந்திருந்தனர். ஆனால் பூக்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். சந்தையில் விற்பனையான பூக்களின் விலை கீழ்வருமாறு.
சாமந்தி பூ | ரூ.120 / கிலோ |
சம்பங்கிப்பூ | ரூ.120 / கிலோ |