தருமபுரி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் கால்நடைகளுக்கு சினை ஊசி போடுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்ட சிலர் மருத்துவர்கள் என கூறி மருந்தகம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதனடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மருத்துவர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் தருமபுரி சோளக் கொட்டாய் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் திடீரென ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மருந்தகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. மேலும், மருந்து, மாத்திரைகள் விற்பனை தொடர்பான தகவல்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது.