தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காடுசெட்டிபட்டி சோதனைச்சாவடியில் சுப்ரமணியன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ராயக்கோட்டை பகுதியிலிருந்து பாப்பரப்பட்டி நோக்கிச் சென்ற பாலாஜி என்பவரின் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனைசெய்தனர்.
7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் இந்தச் சோதனையில் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி கொண்டுசென்றது தெரியவந்தது. இதனையடுத்து தோ்தல் பறக்கும் படையினர் பணத்தைப் பறிமுதல்செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பணத்தின் உரிமையாளர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: பரப்புரைக்கு சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிவந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து